tamilnadu

img

இ-சேவை மையங்களை மூடுவதற்கு எதிர்ப்பு

சென்னை, மே 23- தமிழகம் முழுவதும் 96  இ-சேவை மையங்களை மூடுவதுடன் பணியாளர்களை பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று (மே 23) முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஊழியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் முன்பு திரண்டனர். அப்போது காவல்துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் பொது மேலாளரிடம் சங்க நிர்வாகி களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சி.கோபிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 5ஆம் தேதி முதல் 16 மாவட்டங்களில் உள்ள 96 இ-சேவை மையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. இதற்கு தெரிவித்து மேலாளரை சந்தித்து மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை” என்றார். இ-சேவை மையங்களை தொடர்ந்து நடத்து வது குறித்து அடுத்து நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்றும் அது வரைக்கும் ஊழியர்களுக்கு ஆதார் போன்ற மையங்களில் மாற்று வேலை வழங்கப்படும் என்றும் மேலாளர் உறுதியளித்ததாகவும் கூறினார். இந்த போராட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்  எஸ்.சுகுமார், மாநில துணைச் செயலாளர்கள் செ.கணேஷ், சையத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.