tamilnadu

அரசியல் எதிரொலிகள்

அரசியல் எதிரொலிகள்

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காவல் துறை முழுமையான பாதுகாப்பை வழங்க வில்லை என விமர்சித்தார். “திமுக அரசில் கூட்டம்  நடத்துவது கடினமாக இருக்கிறது. முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த உயிரிழப்பு களை தவிர்த்திருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

பாஜகவின் கருத்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பது வழக்கமாகிவிட்டது என விமர் சித்திருக்கிறார். திமுகவினர் நடத்தும் கூட்டங் களுக்கு மாவட்டத்தின் மொத்த காவல்துறையின ரையும் அனுப்பி பாதுகாப்பு வழங்கும் அரசு, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு போதிய பாது காப்பு அளிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு கோரிக்கை கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற அமர்வு விசா ரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக பாஜக  தலைவர் நயினார் நாகேந்திரன் “இந்த சம்பவம்  இந்தியாவையே உலுக்கியிருக்கிற ஒரு மாபெரும்  துயரமான சம்பவம். குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று  தெரிவித்தார்.

அதிக இழப்பீடு தர கோரிக்கை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “உயி ரிழந்தோர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபா யும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம்  ரூபாயும் அரசு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை  விடுத்தார். “யார் பொறுப்பு என்பதைவிட, தற்போது ஆபத்தான நிலையில் உள்ளவர்களைக் காப்பதே முக்கியம்” என்றும் தெரிவித்தார்.

திரைத்துறையினர் கடும் விமர்சனம்

கரூர் துயர சம்பவத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த துடன், விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  குறிப்பாக சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வில், “உயிரிழந்த குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த  இரங்கல்கள். தவறு என்பது தவறி செய்வது, தப்பு  என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன்  திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ” என விஜய்யை நோக்கி கூறினார். நடிகர் கார்த்தி “முடியாத துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம்  பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும்  இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்து ழைப்போம்” என்று தெரிவித்தார். ராஜ்கிரண், விஷால், சூரி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

கி.வீரமணி கடும் விமர்சனம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி “கரூரில் கூட்ட  நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது ஆறாத் துயரம்;  மாளா சோகம்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். “விஜய் பிரச்சாரத்தில் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்ற வில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே பலர்  மயக்கம் அடைந்து விழ தொடங்கினர். நீதிமன்றம், காவல் துறை விதித்த எந்த கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை. மனித நேயத்திலும் கடமையாற்றுவதிலும் முதல மைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார்” என்று குறிப்பிட் டார்.

அறிக்கை கேட்கும் ஆளுநர் கரூரில் 40 பேர் உயிரி ழந்த சம்பவம் தொடர்பாக  ஒன்றிய அரசு மற்றும் மாநில  ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகி யோர் தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கோரியுள்ளனர்.

எம்.பி., ஜோதிமணியின் வேதனை கரூர் நாடாளுமன்ற உறுப் பினர் ஜோதிமணி, “கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடி யாத துயரமான சம்பவம். 9 மாத நிறைமாத கர்ப்பிணியின் கணவர், திருமணம் நிச்ச யம் செய்யப்பட்ட இருவர்,  குழந்தைகள் என தொக்குப் பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்தி கிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயி ரிழந்துள்ளனர். அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று  தெரியவில்லை” என்று கண்ணீ ருடன் தெரிவித்தார்.

மருத்துவ உதவி உறுதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி “இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்காமல் தமிழ் நாடு அரசே அதை ஏற்றுக்கொள் ளும்” என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற விசாரணை கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி விவகாரம்  தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை யில் விசாரணை நடைபெற்றது. உயர் நீதி மன்ற நீதிபதி தண்டபாணி முன்பாக தவெக வினர் முறையீடு செய்தனர். கூட்ட நெரிசல்  பலி தொடர்பான சிசிடிவி காட்சி உள்ளிட்ட  ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் தவெகவினர் கோரிக்கை விடுத்தனர். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தவெகவினர் முறையீடு செய்த நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் திங்களன்று, பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசார ணைக்கு வருகிறது.

காவல்துறையின் விளக்கம் கரூர் மருத்துவமனையில் செய்தி யாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வா தம், “தமிழக வெற்றிக் கழக கூட்டத்திற்கு  தேவையான பாதுகாப்பு வழங்கப் பட்டது. கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெறுகிறது. விசாரணை யின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கள் எடுக்கப்படும். ஆணைய அறிக் கைக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட நெரிசலில் காய மடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்” என்று  தெரிவித்தார்.

சமூக ஊடக எதிரொலி இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மை, காவல் துறையின் தவறுகள், கூட்ட மேலாண்மை யின் அவசியம் குறித்து கடுமையாக விவா தித்து வருகின்றனர். #நீதிகேட்கிறோம் #கரூர்வேதனை போன்ற ஹேஷ்டேக்கு கள் வைரலாகியுள்ளன. ‘#கரூர்துயரம்’ என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

தவெக வழக்கறிஞரின் வாதம் சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழக வெற்றிக் கழக  வழக்கறிஞர் அறிவழகன், “காவல்துறை கொடுத்த நிபந்தனைகளை இதுவரை நடந்த எல்லா கூட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றியிருக்கிறது. திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி என எல்லா இடங்களிலும் காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கூட மீற வில்லை. விஜய் முறையாக மக்களைச்  சந்தித்திருக்கிறார்” என்று கூறிக் கொண்டார்.

துயரத்தின் நீண்ட நிழல்

கரூரின் கண்ணீர் இன்னும் காய வில்லை. 40 குடும்பங்கள் தங்கள் அன்புக் குரியவர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த துயரம் தமிழக மக்களின் மனதில் நீண்ட காலம்  நிலைத்திருக்கும். அரசியல் பரப்புரை களும் கூட்டங்களும் இனி எப்போதும் இந்த கரூர் நினைவுகளோடு நடைபெ றும். ஒரு அரசியல் தலைவரைப் பார்க்க வந்த மக்கள் தங்கள் உயிரையே இழக்க  நேரிட்டது என்பது தமிழக அரசியலின் மறக்க முடியாத கசப்பான அத்தி யாயமாக இருக்கும்.