tamilnadu

img

மதுரை மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

மதுரை, நவ.17- மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசனின் மக்கள் குறை தீர், தொகுதி மேம்பாட்டு அலுவலகம் ரயில் நிலையம் எதிரில் உள்ள மங்கம்மாள் சத்தி ரத்தில்  ஞாயிறன்று திறக்கப்பட் டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினரு மான என்.நன்மாறன் திறந்து வைத் தார்.  காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், திருப்ப ரங்குன்றம் தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சர வணன், திமுக பொறுப்புக்குழு தலைவர்கள் கோ.தளபதி, வேலுச் சாமி, குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.விஜயராஜன், புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்கே.பொன் னுத் தாய், எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.பாலா, மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா பூமிநாதன், வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி பி.என்.அம்மாசி, மதச் சார்பற்ற ஜனதாதளம் மாநிலப் பொதுச் செயலாளர் க.ஜான் மோசஸ், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாநில நிர்வாகி பாண்டியம்மாள்  தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஜி.ரத்தின வேலு, ஜெகதீசன்,  மடீசியா நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

;