tamilnadu

‘ஸ்மார்ட் சிட்டி’ ஊழலை விசாரிக்க ஒருநபர் குழு

சென்னை,மார்ச் 3- தமிழக தலைமைச் செயலர் வெளியிட்ட அரசாணை: சென்னையில் மழை வெள்ளம் தேங்கியது குறித்த சட்டப் பேரவை உறுப்பினர்களின் கேள்வி களுக்கு கடந்த ஜன. 6 ஆம் தேதி பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக் கப்படும் என்று அறிவித்தார். இதை யடுத்து, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள் யூ.சி. டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பெரும் பான்மை மக்களின்விருப்பத்தின் படி யானதா? திட்டத்துக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப் பட்டதா? பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய விதிப்படி வழங்கப்பட்டதா? பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பனவற்றை விசாரணைக் குழு ஆய்வு செய்யும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்ச னைகள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளைகுழு அளிக்கும். பதவி யேற்ற 3 மாதங்களில் விசாரணை அறிக்கை யை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக் குழு அலுவலகம், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் செயல் படும். நகராட்சி நிர்வாக இயக்குநர், விசார ணைக் குழுவுக்கான அலுவலகம், உரிய தகுதியான அலுவலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.