tamilnadu

img

பால் சுரப்பின்றி தாய் - சேய் அவதி காசாவில் பத்தில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு!

ஜெருசலேம், ஜூலை 18- காசாவில் உள்ள பத்தில் ஒரு பங்கு குழந்தைகள் கடுமையான ஊட்  டச்சத்து குறைபாடுடையவர்கள் என்று  ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்  பான யுஎன்ஆர்டபிள்யூஏ அறிக்கை தெரிவிக்கிறது. 2024 ஜனவரி முதல் காசா மருத்துவமனைகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது. “குழந்தைகள் பட்டினியால் வாடும் சூழ்நிலை மனிதரால் உரு வாக்கப்பட்டதாகும். குழந்தை களுக்கு உதவி வழங்குவது உட்பட,  காசாவில் ஐ.நா செயல்பட அனு மதிக்கப்பட வேண்டும்” என்று யுஎன்ஆர்டபிள்யூஏ தலைவர் பிலிப் லாசரினி கூறியுள்ளார். “போர் நிறுத்தத்தில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அதிக இறப்பு கள் ஏற்படும்; மருந்து, ஊட்டச்சத்து, சுகாதார பொருட்கள் மற்றும் எரி பொருள் அனைத்தும் விரைவாக  தீர்ந்து வருகின்றன; இஸ்ரேல் மற்றும்  அமெரிக்க ஆதரவுடன் காசா மனி தாபிமான அறக்கட்டளை நடத்தும் உணவு விநியோக மையத்தில் 870-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன தாய்  மார்கள் மிகவும் ஊட்டச்சத்து குறை பாடுடையவர்களாக உள்ளனர்” என்று பாலஸ்தீன-ஆஸ்திரேலிய-நியூசிலாந்து மருத்துவ சங்கத்தின் செவிலியரான ஆண்டி கிளார்க் - வாகன் ஜூலை 16 அன்று அல் ஜசீரா காட்சி ஊடகத்திடம் தெரிவித்தார். உணவு, சுகாதாரப் பொருட்கள், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்க ளுடன் 6,000 க்கும் மேற்பட்ட லாரி கள் காசாவுக்கு வெளியே காத்தி ருக்கின்றன. ஆனால், அவர்களை காசாவிற்குள் நுழைய இஸ்ரேலிய ராணுவம் அனுமதிக்கவில்லை.