tamilnadu

img

புதிதாக 956 வகுப்பறை கட்டடங்கள்!

சென்னை, ஜூலை 19 - பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ. 264 கோடியே 15 லட்சம் செல வில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள், கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இவற்றில் பள்ளிக் கல்வித்துறை யில் 114 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டு ள்ள 515 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் தொடக்க கல்வி இயக்கத் தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும்  திட்டத்தின் கீழ் ரூ. 68 கோடியே 66 லட்சம் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டு ள்ள 441 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்ட டங்கள், தமிழ்நாட்டின் 28 மாவட்டங் களில் இயங்கி வரும் 28 தகை சால் பள்ளிகளில் 61 கோடியே  70 லட்சம் ரூபாய் செலவில் புனர மைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், திருவண்ணாமலையில் முதன் மைக் கல்வி அலுவலர் அலுவல கத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவை அடங்கும். மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு களில் வெற்றி பெற்று, சென்னை, ஐ.ஐ.டி-யில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.  பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டி.யில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில் வலவு, அரசுப் பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி ரோகிணி, சட்ட பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அஜய், தரமணி ஃபேஷன் டெக்னாலஜியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள புளியம் பட்டி மாணவியர் மீனா மற்றும் எஸ். துர்கா, மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் கே. தவமணி, ஆகிய 8 மாணவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக்கணினிகளை வழங்கினார்.  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறை கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப் பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.