tamilnadu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன. 17-க்கு மாற்றம்

மதுரை ஜன 11-   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  குறித்து  ஆட்சியர் தலை மையில் விழாக் கமிட்டியினருடன் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை நடை பெற இருந்தது.  இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் த மிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே முழு ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  கட்டுப்பாடுகளுடன் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் எனவும், ஜல்லிகட்டு காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன் லைன் பதிவு ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை  மதியம் 3 மணி முதல் புதன்கிழமை மாலை 5 மணி நடை பெறும்.  பார்வையாளர்களுக்கும்  மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நேரடி அனுமதி சீட்டு வழங்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் அனு மதிக்கப்படுவர்கள்  என்று தெரிவித் தார்.