tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “நோட்டாவுக்கு” இடமில்லை

சென்னை, பிப்.18- சனியன்று (பிப்.19) நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா மற்றும் வி.வி.பாட்  கிடையாது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அர சியல் கட்சியினர் தங்களது சின்னங்களிலும், சுயேட்சை கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட சின்னங்களிலும் போட்டியிடுகின்றனர். ஆனால் எந்தச் சின்னத் திற்கும் வாக்களிக்க விருப்ப மில்லாத வாக்காளர்கள் நோட்டா சின்னத்திற்கு வாக்களிப்பது இந்த உள்ளா ட்சி தேர்தலில் கிடையாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் சீட்டையும் பெற முடியாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளில் இதற்கு உரிய இடமில்லை என்ப தையே காரணமாக சுட்டிக்கா ட்டியுள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம். ‘உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை 2006-ல் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை  மாநில அரசுதான் செய்ய வேண்டும். தேர்தல் விதி முறைகள் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்னரே இதனை அரசு செய்ய முடியும்’ என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விவிபேட், நோட்டாவை அமல்படுத்து வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.