வடசென்னையில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கு காப்பகம் ஏற்படுத்துக
வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 28- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட 5ஆவது பகுதி மாநாடு திரு வொற்றியூரில் கே.முருகன் நினைவரங்கில் ஞாயிறன்று (ஜூலை 27)நடைபெற்றது. தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.ராஜேந்திரன் சங்கக் கொடியை ஏற்றினார். வி.ஜெயந்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.ராணி வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.நட ராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் கே.பி.பாபு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, மாதர் சங்க வடசென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ஆர்.செல்வகுமாரி வரவேற்றார். ஆர்.மகேந்திரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் வடசென்னையில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளி பெண்களுக்கு காப்பகம் உரு வாக்க வேண்டும், வீடற்ற, வாடகை வீட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 25 விழுக்காடு மானியத்துடன் தரை தளத்தில் வீடு வழங்க வேண்டும், சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் மானியத்துடன் கூடிய நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொக்ககோலா நிறுவனத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு பதிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக ஆர்.ஜெயச்சந்திரன், செயலாளராக எஸ்.ராணி, பொருளாளராக ஆர்.நடராஜன் உள்ளிட்டு 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.