tamilnadu

img

சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு நிதி டிஎன்பிஎல் தொழிலாளி ரூ. 25 ஆயிரம் வழங்கல்

கரூர், நவ.29- சென்னை அயனாவரத்தில் சிஐடியு  மாநிலக்குழு நடத்தி வருகின்ற நிர்மல் பள்ளிக்கு  சிஐடியு  கரூர் மாவட்டக்குழு சார்பில்   100 நபர்களிடம் தலா 1000 வீதம்  பெற்று ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்  வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம்  நடப்பாண்டிற்கான ரூபாய் ஒரு லட்சத்திற்கான தொகையை நகர்கோவிலில் நடைபெற்ற சிஐடியு மாநில மாநாட்டில்   மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம்  வழங்கினார். இதனை தொடர்ந்து  பலர் தங்களது இல்லங்களில் நடைபெறும் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் பொழுது அயனாவரம் பள்ளி நிதியாக  ரூபாய் 1000, 2000 என  முடிந்த அளவுக்கு நிதி வழங்கிவருகிறார்கள்.  இந்நிலையில் நிர்மல் பள்ளிக்கான நிதி திரட்டல்  செய்தியை அறிந்து கரூர் மாவட்டம்,  புகளூர் காகித ஆலையில் பணியாற்றி வரு கின்ற குணசேகரன், புகளூர் சிஐடியு அலு வலகத்திற்கு  வந்து தனது சொந்த நிதி யாக ரூபாய் 25 ஆயிரத்தை சிஐடியு   கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்தி டம் வழங்கினார். இந்த தொகையை ஆண்டு தோறும் பள்ளி நிதியாக வழங்குவேன் என்று குணசேகரன் தெரிவித்தார். நிதியை பெற்றுக்கொண்ட ஜி.ஜீவானந்தம் கரூர் மாவட்டக் குழு சார்பில் அவருக்கு நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தார். அப்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்தி ரன் உடனிருந்தார்.

சவுந்தரராசன்  பாராட்டு

நிதி வழங்கிய தகவல் அறிந்த சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், குண சேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஐடியு நடத்தும் அயனாவரம் பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 25,000 நிதி வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் தங்களுக்கு சிஐடியு  மாநிலக் குழு சார்பில் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
 

;