tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

மெட்டா ஏஐ வீடியோக்களை வழங்கும் புதிய அம்சம்

 மெட்டா நிறுவனம் “வைப்ஸ்” (Vibes) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி, ஸ்மார்ட்போன் களுக்கான Meta AI செயலியிலும், கணினிகளுக் கான meta.ai தளத்திலும், “வைப்ஸ்” இன் ஆரம்ப முன்னோட்டம் வெளியிடப்பட்டது. “வைப்ஸ் பீட்” (Vibes Feed) என்பது டிக் டாக் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல தோன்றினாலும், அதில் பயனர்கள் நேரடியாக கேமரா மூலம் எடுத்த வீடியோக்கள் இடம்பெறாது. இதில் உள்ள ஒவ்வொரு வீடியோவும் மெட்டாவின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதோ அல்லது மறுவடிவமைக்கப்பட்டதோ ஆகும். பயனர்கள் ப்ராம்ட் (prompt) அல்லது ஏற்கனவே உள்ள மீடியாவைப் பயன்படுத்தி புதிய வீடியோக்களை உருவாக்கலாம். மேலும் பல்வேறு காட்சியமைப்பு (visual style) முறைகளைச் சோதித்து பார்க்கலாம். பீடில் தோன்றும் வீடியோக்களை ரீமிக்ஸ் (remix) செய்து புதிய காட்சிகள், இசை அடுக்குகள் மற்றும் பாணி மாற்றங்களைச் சேர்க்கவும் முடியும். இதன் மூலம்  பயனர்கள் குறுகிய வடிவில், AI உருவாக்கிய வீடியோக்களை எளிதாக உருவாக்கி, பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

லிங்க்ட்இன் ஏஐ உருவாக்கம் – உங்கள் தரவுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பிரபல தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான லிங்க்ட்இன்(linked in), வரும் நவம்பர் 3, 2025 முதல் சில நாடுகளில் பயனர்களின் ப்ரொஃபைல் தகவல்களை பயன்படுத்தி தனது ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) மாடலை மேம்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. லிங்க்ட்இனின் Generative AI FAQ பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, பயனர்களின் பெயர், இ-மெயில், உள்நுழைவு விவரங்கள், இரு-படி சரிபார்ப்பு, கட்டண (Payment) தொடர்பான தகவல்கள், சந்தாத் (Chat) விவரங்கள், உறுப்பினர் தேர்ந்தெடுத்த மொழி போன்றவை சேகரிக்கப்படலாம்.  மேலும், IP முகவரி, சாதன ஐடி, பயனர் முகவர் (User Agent), லொகேஷன் தரவு, உலாவி வகை, ஓ.எஸ் பதிப்பு, குக்கீகள் போன்ற தொழில்நுட்ப தகவல்களும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதிலிருந்து உங்கள் தரவுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம், 1.    LinkedIn-ல் உள்நுழையவும். 2.உங்கள் ப்ரொஃபைல் படத்தை கிளிக் செய்து Settings & Privacy-ஐ தேர்ந்தெடுக்கவும். 3.இடப்புற மெனுவில் Data privacy என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 4.Data for Generative AI Improvement என்பதைக் கிளிக் செய்யவும். 5.Toggle-ஐ Off செய்யவும். இதை செய்வதன் மூலம், உங்கள் ப்ரொஃபைல் விவரங்கள் ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்தப்படாது. 

கூகுள் போட்டோஸில் புதிய எடிட் அம்சம்!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கூகுள் போட்டோஸில் புதிய ‘Help me Edit’ எனும் புகைப்படத் திருத்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வசதி, முதலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் Google Pixel 10 Series ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதி மூலம், பயனர்கள் இயல்பான மொழியைப் பயன்படுத்தி (வாய்ஸ் அல்லது டெக்ஸ்ட் ப்ராம்ப்ட் வழியாக) புகைப்படங்களை எளிதாக திருத்த முடியும். இதில் ஒளிச்சேர்க்கையை மேம்படுத்துதல் (Lighting Adjustments), புகைப்படத்தில் தேவையற்ற பொருள்களை நீக்குதல் (Object Removal), பழைய மற்றும் மங்கிய புகைப்படங்களை புதுப்பிக்கும் வசதி, ஒருவரின் படத்தில் சன்கிளாஸ் (Sun Glasses) போன்ற பொருட்களை சேர்க்கும் வசதி, தொடர்ச்சியான வழிமுறைகளை (follow-up instructions) கொடுத்து பயனர்கள் ஒரே படத்தில் தொடர்ந்து பல்வேறு திருத்தங்களைச் செய்து, விரும்பியபடி மேம்படுத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.  ‘ஹெல்ப் மி எடிட் அம்சம்’ இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா உள்ளிட்ட  பிற நாடுகளிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.