15 வினாடிகளில் இதய நோய்களை கண்டறியும் புதிய ஏஐ ஸ்டெதஸ்கோப்
மருத்துவ உலகில் பெரும் முன்னேற்றமாக, இதய நோய்களை கண்டறியும் புதிய ஏஐ ஸ்டெதஸ்கோப்பை இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் இம்பீரியல் கல்லூரி ஹெல்த்கேர் என்.எச்.எஸ் அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஏஐ(AI) ஸ்டெதஸ்கோப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை நோயாளியின் மார்பில் வைத்தவுடன், இதயத்தின் மின்னழுத்த சிக்னல்களை (ECG) பதிவு செய்கிறது. பின்னர் இந்த கருவியில் இருக்கும் மைக்ரோஃபோன், இரத்த ஓட்டத்தின் ஒலியைப் பதிவு செய்கிறது. இந்த தரவுகள் cloud-இல் அனுப்பப்பட்டு, ஏஐ அல்காரிதம் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் முடிவுகளை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த கருவியின் மூலம், இதய செயலிழப்பு (Heart Failure), ஏட்ரியல் ஃபைப்ரில்லேஷன் (Atrial Fibrillation) மற்றும் இதய வால்வு நோய் (Heart Valve Disease) ஆகிய மூன்ற முக்கிய இதய நோய்களை 15 வினாடிகளில் கண்டறிய முடியும். மேலும், இதய நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை விரைவாக தொடங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இ-சிம் பயனர்களுக்கு எச்சரிக்கை
! இந்தியாவில், ஹேக்கர்கள் இப்போது இ-சிம் (eSIM) பயனர்களை குறிவைத்து மோசடி செய்து வருகின்றதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, I4C எனப்படும் சைபர் கிரைம் பிரிவு, இ-சிம் பயனர்களிடம் ஹேக்கர்கள் எவ்வாறு பண மோசடி செய்கின்றனர் என்பதை வெளியிட்டுள்ளது, அதன்படி, முதலில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட வருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்கிறார்கள். பின்னர் அவர்கள் eSIM செயல்படுத்தும் கோரிக்கையை அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர் தவறுதலாக அந்தக் கோரி க்கையை ஏற்றுக் கொண்டால், அங்கிருந்தே சிம்கார்டு ஹைஜாக் (Hijack) ஆகிறது. அதன் பின், அனைத்து அழைப்புகளையும், குறுஞ்செய்தி களையும் ஹேக்கர்கள் கட்டுப்படுத்த முடியும். பின்னர் பயனரின் physical SIM நெட்வொர்க் சிக்னலை இழக்கும். OTP, குறுஞ்செய்திகள் (SMS) அனைத்தும் புதிய eSIM ப்ரொஃபைல் அதாவது ஹேக்கரின் ஃபோன்னுக்கு சென்றுவிடும். இதை அடுத்து, வங்கி பரிவர்த்தனைகளுக்கான OTP-களும், ஹேக்கர்களால் கையாளப்பட்டு, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை அவர்கள் எளிதில் திருட முடியும்.
ஐ-போனுக்கான அடோப் பிரிமியர் செயலி அறிமுகம்!
அடோப் (Adobe) நிறுவனம், ஐபோனுக்கான பிரிமியர் (Premiere) வீடியோ எடிட்டிங் செயலியை கொண்டு வந்துள்ளது. இதில் ஏஐ தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளதால் வீடியோ எடிட்டிங்கை ஐபோனில் எளிதாக செய்யலாம். 4K HDR எடிட்டிங், Adobe Firefly மூலம் படங்கள் மற்றும் இசை உரு வாக்கம், தானியங்கி சப்டைட்டில்கள் யூடியூப்/இன்ஸ்டாகிராமுக்கு உடனடி அப்லோட் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி இலவச மாகவும், விளம்பரம் இல்லா மலும் கிடைக்கும். கூடுதல் சேமிப்பு அல் லது ஏஐ கிரெடிட்ஸ் தேவைப்பட்டால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஐபோன் பயனர்கள், செப்டம்பர் 30, 2025 முதல் App Store-இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.