tamilnadu

img

16 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க நெஸ்லே முடிவு

16 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க நெஸ்லே முடிவு

உலகப் புகழ்பெற்ற உணவு மற்றும் குளிர் பானப் பொருட்களைத் தயாரிக்கும் சுவிஸ் நிறுவன மான நெஸ்லே அடுத்த இரண்டு ஆண்டு களில் உலகளவில் 16 ஆயிரம் ஊழியர்க ளை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஃபிலிப் நவ்ரா ட்டில் செப்டம்பர் மாதம் பொறுப் பேற்றார். அவர் நிறுவனத்தில் மறுசீர மைப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவது என்ற நோக்கத்தில் இந்தப்  பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவ தாகக் கூறியுள்ளார். பல நிறுவனங்கள் தானியங்கு தொ ழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டு உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. நெஸ்லே நிறுவனமும் அதற்கேற்ப இன்னும் வேகமாக மாற வேண்டும் என்று பணி நீக்க நடவடிக்கைகளை வலியுறுத்தி நவ் ராட்டில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.  மேலும் மாறிவரும் சந்தை நிலவரங்க ளுக்கு இடையே செயல்பாடுகளைச் சீராக்க, “ஊழியர்களின் எண்ணிக்கை யைக் குறைக்க வேண்டியது அவசிய மான முடிவு.” அதன் படியே இந்தப் பணி நீக்கங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.