tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

சேலம், அக்.24- நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் 65  ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில்  பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் அதிகளவில் தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாகவும் கர்நாடகா அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய  நிலையில் இருப்பதால் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று பிற்பகல் 12 மணி முதல் 55,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

உபரிநீரை பங்கிடுவதில் பிரச்சனை பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தருமபுரி, அக்.24- பஞ்சப்பள்ளி அணை உபரிநீரை ஏரிகளுக்கு பகிர்ந்து கொள்வது தொடர்பாக விவசாயிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி (சின்னாறு) அணையின் உபரிநீரை ஜெர்த்தலாவ் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு பகிர்ந்து கொள்வதில் கடகத்தூர் பகுதி விவசாயிகள், பாப்பாரப்பட்டி மற்றும் இண்டூர் பகுதி விவசா யிகள் என இருதரப்புக்கும் இடையே பிரச்சனை நிலவி வரு கிறது. இப்பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்தும் வகையில் இரு  தரப்பினரிடையே தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி தலைமை யில், வியாழனன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், உதவி  பொறியாளர் மாலதி, தருமபுரி சரக துணை காவல் கண்கா ணிப்பாளர் சிவராமன் மற்றும் இருதரப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, கடகத்தூர், சோகத்தூர் மற்றும்  ராமக்காள் ஏரிகள் முழுவதுமாக நிரப்பப்பட்ட பின்னரே பாப் பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு உபரிநீரை திறந்துவிட வேண்டும் என ஒருதரப்பு விவசாயிகள் தெரிவித்தனர். அணையிலிருந்து வெளியேறும் குறைந்த அளவு உபரி நீரால் கடகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம் பவே 2 மாதங்கள் ஆகிவிடும். அதன்பின் உபரிநீர் வர வாய்ப் பில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை தொடர் பாக அன்றைய கோட்டாட்சியர் சித்ரா தலைமையில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், தருமபுரி பகுதி ஏரிக ளுக்கு 70 சதவீதமும், பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதி ஏரி களுக்கு 30 சதவீதமும் என ஒரே நேரத்தில் 2 பகுதிகளுக் கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த  உத்தரவை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அப்போது தான் இரு பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது என மற்றொரு தரப்பு விவசாயிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட சில விவசாயிகள்  மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் கூட்டம் தொடர்ந் தது. ஆனாலும், பிரச்சனை தொடா்பாக கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். எனவே, சில நாட்களுக்கு பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்ட மிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 நாட்களுக்கு பிறகு மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம், அக்.24- மேட்டுப்பாளையம் - உதகை மலை  ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகி றது. வடகிழக்கு பருவமழை காரணமாக, நீல கிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை யால், மேட்டுப்பாளையம் - உதகை மலை  ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 10க்கும் மேற் பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலை  ரயில் பாதையில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. இதனால் கடந்த அக்.19  ஆம் தேதியிலிருந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறாங்கற் கள் வெடி வைத்து அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து 5 நாட்களுக்கு பின்னர் மீண் டும் உதகை மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சிறுவன் மீட்பு

தருமபுரி, அக்.24- தருமபுரி மாவட்டம், டி.  அம்மாபேட்டையைச் சேர்ந் தவர் ரித்திக் (15). இவர் தென் பெண்ணை ஆற்றில் வியாழ னன்று குளித்துக் கொண்டி ருந்தபோது, நீர்வரத்து அதி கரித்ததையடுத்து தண்ணீ ரில் சிக்கி அங்கிருந்த பாறை யில் நின்றவாறு வெளியேற முடியாமல் தவித்தார். இதை யடுத்து மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையி னர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை கயிறு மற்றும் மிதவைகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

ரூ.2.54 கோடி கடத்தல்: இளைஞர் கைது

கோவை, அக்.24- கோவையிலிருந்து கேர ளாவிற்கு ரூ.2.54 கோடி கடத் திய ராஜஸ்தான் மாநில இளைஞரை கேரள சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். கோவை வழியாக கேர ளாவிற்கு ஹவாலா பணம்  கடத்தப்படுவதாக கேரளா  சுங்கத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாளையாறு சுங்கச்சாவடி அருகே சுங்கத் துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரி கள் வெள்ளியன்று வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது கோவையிலி ருந்து கேரளா நோக்கி வந்த  கார் ஒன்றை சுங்க அதிகாரி கள் நிறுத்தி சோதனை செய் தனர். காரில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந் ததும், அதற்கு உரிய  ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரூ.2.54 கோடி பணத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், காரை ஓட்டி வந்த ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங் (33) என்ற இளை ஞரை கைது செய்தனர். பணம் எங்கிருந்து யாருக்கு  கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.