tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

நாட்டு நலப் பணித்  திட்ட நிறைவு விழா

தஞ்சாவூர், அக்.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய நாட்டு  நலப்பணித் திட்ட முகாம்  நிறைவு விழா, பள்ளி  தலைமை ஆசிரியர் சி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  உதவித் திட்ட அலுவலர் ஏ.முரு கேசன் வரவேற்றார். திட்ட  அலுவலர் சோழ பாண்டி யன் அறிக்கை வாசித் தார். காலகம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ராமநாதன் மாணவர்களுக்கு சான்றி தழ் வழங்கி சிறப்புரை யாற்றினார். பேராவூ ரணி ரோட்டரி சங்கத் தலைவர் சிவ.சதீஷ் குமார் மற்றும் ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.  

சிபிஎம் ரசீது வழங்கும் பேரவை

திருச்சிராப்பள்ளி, அக்.8 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி  மாவட்டம் ஸ்ரீரங்கம் பகு திக்குழு உறுப்பினர் களுக்கு ரசீது வழங்கும் பேரவை ஸ்ரீரங்கத்தில் செவ்வாயன்று நடந்தது.  கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் விஜய ராகவன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் தலைமை வகித்து, உறுப்பினர்களுக்கு ரசீது  வழங்கினர். கூட்டத்தில் பகுதிக்குழு உறுப்பி னர்கள் வீரமுத்து, சுப்பி ரமணி, சந்துரு, கோவிந் தன், சீனிவாசன், செந்தில் குமார் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

முதியோர் தின கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, அக்.8 - உலக முதியோர் தினத் தையொட்டி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கம்  சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்ன தாக ரயில்வே சாலையில்  இருந்து பேரணியாக புறப்பட்டு நகரத்தின் முக்கிய சாலை வழியாக பேரணி நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் பி.சண் முகம் தலைமை வகித் தார். செயலாளர் என்.சேகர் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செய லாளர் குரு.சந்திரசேக ரன், பி.கிருஷ்ண மூர்த்தி, மாநில பொதுச்  செயலாளர் மற்றும் திரு வாரூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்பா ளர்கள் கலந்து கொண் டனர்.  மாவட்டப் பொரு ளாளர் கோ. மீனாட்சி சுந்தரம் நன்றி உரையாற் றினார்.

முன் திட்டமிடல் கூட்டம்

அறந்தாங்கி, அக்.8 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்தில்  இரண்டாம் பருவத்திற் கான  எண்ணும் எழுத்தும்  முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. இதனை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழி யன் தொடங்கி வைத்தார்.  மணமேல்குடி வட்டார  வளமைய மேற்பார்வை யாளர் (பொ) சிவ யோகம் முன்னிலை வகித் தார்.  ஆசிரியர்கள் த. ஜோதி, விஜி, நந்தினி, ஆசிரியர் பயிற்றுநர் சசி குமார் மற்றும் பன்னீர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

மயிலாடுதுறை, அக்.8 - மயிலாடுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல்  அரசினர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சிறப்பு முகாம் நடை பெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கே.ரமேஷ் தலைமையில் தொடங்கிய முகாம், திட்ட அலுவலர் இரா.சௌமியா மற்றும் உதவி  திட்ட அலுவலர் எம். தேவேந்திரன் மேற்பார்வை செய்தார். சங்கரன்பந்தல், இலுப்பூர், சிவன்கோவில், மசூதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி போன்ற இடங்களில் தூய்மைப் பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். முகாமில்  பங்கேற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

பாபநாசம், அக்.8- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் பூங்குழலி தலைமை வகித்தார். செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா முன்னிலை வகித்தனர்.  பாபநாசம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானிய‌த் திட்டப் பணிகள், நமக்கு நாமே திட்ட பணிகள் மேற்கொள்வது, பழுதடைந்த தார்ச் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளில் உள்ள   பள்ளங்கள், சிறிய அளவிலான சேதமடைந்த சாலைகளை பழுது பார்ப்பது, 2025-2026 ஆம் ஆண்டு பள்ளி மேம்பாட்டு  மானியம் 6 ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் அரசி னர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு  சுற்றுச்சுவர் அமைப்பது, பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0  திட்டத்தின் கீழ் ரூ.14.82 கோடியில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப் பட்டு, வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் பரம சிவம் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அக்.14, 21, 28 தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள  அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சாவூர், அக்.8 -  தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை  பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு கோட்ட அளவிலும் நடைபெறவுள்ளது.  அக்.14 (செவ்வாய்) அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தி லும், அக்.21 (செவ்வாய்) அன்று கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே கே.எம்.எஸ்.எஸ் வளாகத்திலும், அக்.28 (செவ்வாய்)  அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம  சேவைக் கட்டிடத்திலும் முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண்  மருத்துவம் ஆகிய அரசு மருத்துவர்கள் மாற்றுத் திறனாளி களை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ள னர். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில்  மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை  பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் இதற்கு முன்  சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு  பயன்பெறலாம்.  மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு(UDID) விண்ணப்பிக்காத மாற்றுத் திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.