tamilnadu

img

திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான் - நாகூரான் 40 ஆவது ஆண்டு நினைவுதினம்

மயிலாடுதுறை, ஜன. 20- மயிலாடுதுறை  மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 40 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் புதனன்று  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கட்சி யின்  ஒன்றிய செயலாளர்  ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.சிம்சன்,ஜி.வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கலைச்செல்வி,காபிரியேல், அம்மையப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் வரவேற்று பேசினார்.  

         கட்சியின் கொடியினை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன்  ஏற்றி வைத்தார்.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி,   மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினருமான எம்.சின்னத்துரை, நாகை மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான வி.மாரி முத்து, சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், கட்சியின்  தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன்,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் வீ.அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வி.சுப்பிரமணியன், தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு,மாவட்டக்குழு உறுப்பினர்கள், விவசாய சங்க, விவசாய தொழிலாளர் சங்கம், மாதர், வாலிபர், மாணவர்,  சிஐடியு மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட, வட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையங்கள் வைத்து,மலர் தூவி, முழக்கமிட்டு செவ்வணக்கம் செலுத்தினர்.  

1982 ஜனவரி 19 அன்று நடை பெற்ற நாடு தழுவிய பொது வேலை  நிறுத்தத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழக காவல் துறை நடத்திய காட்டுமிராண்டித்தன மான துப்பாக்கி சூட்டில் திருமெய் ஞானத்தை சேர்ந்த அஞ்சான், நாகூ ரான் ஆகியோர் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு வினர் அஞ்சலி செலுத்துவது குறிப் பிடத்தக்கது.

;