tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நாகை மாலி எம்எல்ஏ ஆதரவு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு  நாகை மாலி எம்எல்ஏ ஆதரவு

கும்பகோணம், ஆக. 21- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆதரவு தெரி வித்துள்ளார். கும்பகோணம் அரசுப் போக்குவரத்துத் தலைமையகம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக அரசு தொழிலாளர் கோரிக்கை களுக்கு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றக் கோரி போக்குவரத்துத் தொழி லாளர்கள் கடந்த 18ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு  பகுதியாக கும்பகோணத்தில் மூன்றா வது நாளாக இரவு பகல் பாராது  தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்று வருகிறது.  இப்போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளன கும்பகோணம் மண்டலத் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். தொடர்ந்து போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரை யாற்றிய எம்எல்ஏ நாகைமாலி, “அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய நலன்களையும் உரிமை களையும் கோரி அமைதியான முறை யில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் தமிழக அரசு இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், மாறாக அவர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளும் நிலைமையை உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்தார். “தொழிலாளர்களின் பிரச்சனை களை அரசு உண்மையிலேயே தீர்க்க விரும்பினால், போக்குவரத்துத் தொழி லாளர் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி சுமூகமான தீர்வை எட்டலாம். காவல்துறையின் உதவி யுடன் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நினைப்பது அரசுக்கு அழகல்ல” என்று அவர் வலியுறுத்தினார். கடந்த கால அனுபவங்கள் போராடும் தொழிலாளர் தலைவர் களை கைது செய்யும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த நாகை  மாலி, “போக்குவரத்துத் தொழிலாளர் கள் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்த கடந்த கால அரசுகளின் அனுபவங்களை நினைத்துப் பாரு ங்கள். அத்தகைய நடவடிக்கைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் உழைப்பாளர் தின மான மே தினத்திற்கு அரசு விடுமுறை அறிவித்ததையும், மே தின நினைவுப் பூங்கா அமைத்ததையும் குறிப்பிட்ட அவர், “இவை அனைத்தும் மிகவும் பாராட்டுக்குரிய செயல்கள். ஆனால் அதே நேரத்தில் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு  காணாமல் காவல்துறையைக் கட்ட விழ்த்துவிட்டு அடக்குமுறை கையா ள்வது முற்றிலும் பொருத்தமற்ற செயலாகும்” என்று தெரிவித்தார். காவல்துறையினரை நோக்கி நேரடியாக பேசிய எம்எல்ஏ நாகைமாலி, “காவல்துறைக்கு ஒரு முக்கிய மான விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். காவல்துறையின ருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வந்தது சிபிஎம் எம்எல்ஏவான நான்தான். காவல்துறையினருக்கு தொழிற்சங்க உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்று முன்னோடி யாகக் குரல் கொடுத்தது கேரளா சிபிஎம் அரசுமட்டுமே” என்று சுட்டிக்காட்டி னார். “தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் முற்றிலுமாக நீங்கினால் மட்டுமே அவர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு, குடும்பங்கள் நிலைத்து நிற்கும். இதுவே சமூக நீதியின் அடிப்படை” என்று வலியுறுத்தி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொழிலாளர் அணுகுமுறை குறித்து தெளிவுபடுத்திய நாகை மாலி, “எங்கள் கட்சி தொழிலாளர்களின் நல னுக்காக சாதி, மதம், இனம் என எதை யும் பார்க்காது. தொழிலாளர்களாக இருந்தால் போதும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் கொள்கை” என்று தெரிவித்தார். தொடர் காத்திருப்புப் போராட்ட த்தில் அரசுப் போக்குவரத்து மண்டலப் பொதுச்செயலாளர் மணிமாறன், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கக் கௌரவத் தலைவர் ஆர். மனோகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம். கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், மாநகரச் செய லாளர் செந்தில்குமார், பொருளாளர் ரகு, எஸ். இடிசி செங்குட்டுவன் வெங்க டேசன் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஒற்றுமை யுடன் பங்கேற்று வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.