tamilnadu

img

கொலை வெறி தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

கொலை வெறி தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சி, செப். 3 - உளுந்தூர்பேட்டை அடுத்த திரு நாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரி நத்தம் கிராமத்தில் அப்பாவி இளைஞர் சிவசக்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் ரவுடி கும்பலுக்கு துணை போன திருநாவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை உட்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புகார் அளிக்கப்பட்டு புகாரியில் இருந்து விடுபட்ட நபர்களையும் உடனடியாக கைது செய்வதாக பேச்சுவார்த்தையில் உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.வி.ஏழுமலை, ஆர்.பரிமளா, டி.தவமணிகண்டன், கிளைச் செயலாளர் ஆர்.குமார், கே.சக்கரவர்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.