tamilnadu

img

22 மாத ஊதியத்தை நிலுவையுடன் வழங்குக! எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 மாத ஊதியத்தை நிலுவையுடன் வழங்குக! எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர். அக்.15 -  இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு எம்ஆர்எப் ஆலை தொழிலா ளர் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், எம்ஆர்எப் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்ப லூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம். கரு ணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத் தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “கடந்த 22 மாதங்க ளாக வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உட னடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தத்  தொழிலாளர்களை பணியமர்த்தி சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபடுவதை கை விட வேண்டும். விபத்திற்கான முழு  மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். பயிற்சி காலம்  இரண்டு ஆண்டுகள் முடிந்தும், நிரந்தரப் படுத்தாமல், உழைப்புச் சுரண்டல் செய்வதை கைவிட வேண்டும். சுகாதார மற்ற உணவுகள் வழங்குவதை கைவிட  வேண்டும். சுகாதாரமான கழிப்பிடம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தொழிலாளர் சட்டங் களுக்கு எதிராக தொழிலாளர்களை பாதுகாப்பற்ற முறையில் நடத்தும் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி கள் ரெங்கநாதன், செல்வி, பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர் எஸ். அகஸ்டின் மற்றும் எம்ஆர்எப் தொழிலா ளர் சங்கத்தின் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.