tamilnadu

img

எம்.பி.பி.எஸ். மட்டுமல்ல...

எம்.பி.பி.எஸ் படிப்பைத் தாண்டி, BUMS யுனானி. BHMS ஹோமியோபதி, BAMS ஆயுர்வேதம், BSMS சித்தா, BNYS இயற்கை மருத்துவம், BDS பல் மருத்துவம் மற்றும்  bVSc கால்நடை மருத்துவப் படிப்புகளும் உள்ளன. அரசு மருத்துவ மனைகளில் இந்தத் துறைகள் உள்ளதால், அரசு மருத்து வர்களாகப் பணிபுரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.  துணை மருத்துவப் படிப்புகள் மருத்துவத்துறையில் துணை மருத்துவப் படிப்புகளை 3 வகையாகப் பிரிக்கலாம். பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய இந்தப் படிப்புகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது +2 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு  சிறப்புப் பிரிவுகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இந்தப் படிப்புகளை நிறைவு செய்த பின்னர், உடனடியாக வேலை வாய்ப்புகள் உள்ளன. நர்சிங்(செவிலியர்), மருந்தாளுநர் (பி.பார்ம், டி பார்ம் மற்றும்  எம்.பார்ம்), மயக்க மருந்து தொழில்நுட்பம், கார்டியாக் கேர் தொழில்நுட்பம், பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பம், கேத்லாப் தொழில்நுட்பம், கிளினிக்கல் ஆப்டோமெட்ரி, பல் சுகாதாரம், பல் மெக்கானிக், பல் தொழில்நுட்ப வல்லுநர், சுகாதார ஆய்வா ளர், மருத்துவ இமேஜிங் & தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக  தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவ பதிவுகள் தொழில்நுட்பம், மருத்துவ எக்ஸ்ரே டெக்னீஷியன், அணு மருத்துவம் தொழில்  நுட்பம், தொழில்சார் சிகிச்சையாளர், ஆபரேஷன் தியேட்டர் தொழில்நுட்பம், கண் மருத்துவ உதவியாளர், உடற்பயிற்சி சிகிச்சை, கதிரியக்க உதவியாளர், ரேடியோதெரபி டெக்னீஷியன், மறுவாழ்வு சிகிச்சை, சுவாச சிகிச்சை தொழில்நுட்பம்., இரத்தமாற்ற தொழில்நுட்பம் மற்றும் சிறுநீரக டயாலிசிஸ்.