tamilnadu

img

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து தாயும் மகளும் பலி

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து  தாயும் மகளும் பலி

 தாயும் மகளும் பலி சிதம்பரம், அக்.22- சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அசோதை (69) மற்றும் அவரது மகள் ஜெயா (40) ஆகிய இருவரும் செவ்வாயன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.  கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் நனைந்து இடிந்து விழுந்துள்ளது.இதில் அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயாவை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.  புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கிராமத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.கணவர் இறந்ததால் தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.