முத்துப்பேட்டை தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசம்
இராமநாதபுரம், ஆக.27- இராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணியை அடுத்த முத்துப்பேட்டை யில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மதி யம் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமள வென பரவி கடற்கரை அருகே உள்ள தோப்பு வரை தீ பரவியது. இந்த விபத்தில் இரண்டு தோப்பு களுக்கு மேல் தீ பரவியது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானது டன் தோப்பில் இருந்த குடிசை ஒன்றும் எரிந்தது. அக்கம் பக்கத்தில் வீடுகள் எது வும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், கடற் கரை ஓரம் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீய ணைப்பு வீரர்கள் திணறினர். இதையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நான்கு திசைகளிலும் தீயை அணைக் கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை முழு மையாக தெரியவில்லை. எனினும் தோப்பில் உள்ள பழைய மட்டைகளை சேர்த்து எரித்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீ கொளுந்து விட்டு எரிந்ததால் முத்துப்பேட்டை கிராம பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.