tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களுக்கு கேரளாவில் கூடுதல் சுதந்திரம்

திருவனந்தபுரம், ஜன.22- பொதுத்துறை நிறு வனங்களின் இயக்குநர் கள் குழுவிற்கு அதிக செயல் பாட்டு சுதந்திரம் கேரளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி வரையிலான மூல தனச் செலவை முடிவு செய்ய இயக்குநர்கள் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு அரசிடம் முன் அனு மதி பெறத் தேவையில்லை. தற்போது, லாபம் ஈட்டும் நிறுவனங்கள் உட்பட, 1 கோடி ரூபாய் வரையிலான செலவுகளுக்கு தான் அதிகா ரம் உள்ளது. நிறுவன கணக் குகள் மற்றும் தணிக்கை கள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டு கள் லாபம் ஈட்ட வேண்டும். மலபார் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட லாபம் ஈட்டும் நிறு வனங்களில் கூட, இயக்கு நர்கள் குழு அல்லது நிர்வாக இயக்குனருக்கு ரூ.1 கோடி வரை மூலதனச் செலவுகள் அனுமதிக்கப்பட்டன. இது பொதுத்துறை நிறுவன வளர்ச்சிக்கும், சரியான நேரத்தில் முதலீடு செய்வ தற்கும் தடையாக இருந்து வந்தது.