tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகே மாதந்தோறும் மின் கட்டணம்! அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகே மாதந்தோறும் மின் கட்டணம்! அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னை, செப். 2 -  மாதந்தோறும் மின் கட்டணம்  செலுத்தும் முறை அமல்படுத் துவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தொலை நோக்குத் திட்டங்களின் செய லாக்கம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்த தும் மாதந்தோறும் மின் கட்ட ணம் செலுத்தும் முறை அமல் படுத்தப்படும் என்று தெரிவித் தார்.  ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப் படும் பட்சத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது மக்களுக்கு எளிமையாக இருக் கும் என்றும் அவர் விளக்கி னார். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் நடை முறை இருந்து வருகிறது. இதை  மாற்றி மாதம் ஒரு முறை மின்  கட்டணம் செலுத்தும் திட்டத்தை  கொண்டு வர பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.  2021-ஆம் ஆண்டு திமுக  தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவித்திருந் தது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இதுகுறித்து தெரி விக்கப்பட்டிருந்தது.