tamilnadu

img

80 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை டிரம்ப்பிடம் அடகுவைத்த மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘அனுமதி’ தந்தது அமெரிக்கா!

80 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை டிரம்ப்பிடம் அடகுவைத்த மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘அனுமதி’ தந்தது அமெரிக்கா!

புதுதில்லி, மார்ச் 6 - ரஷ்யாவிடமிருந்து 30 நாட் களுக்கு மட்டும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி தருவதாக அமெரிக்கா அறிவித்துள் ளது. இந்திய துறைமுகங்களின் வழி யாகவும், இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும் மட்டுமே, ரஷ்யாவிடமிருந்து கச்சா  எண்ணெய்யை வாங்க வேண்டும் என்பதுடன், ஏப்ரல் 4-க்குள் இறக்கு மதியை முடித்துக் கொள்ள வேண் டும் என ‘உத்தரவு’ போட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசு முழுவதுமாக அமெரி க்காவிடம் சரணாகதி அடைந்து விட்டதையே அமெரிக்காவின் இந்த ஆணவமான ‘உத்தரவு’ காட்டுவ தாக தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். எந்த நாட்டிடம், எவ்வளவு எண் ணெய்யை, எந்தப் பணத்தில் வாங்க  வேண்டும் என்பது இந்தியாவின் உள் நாட்டு நலன் சார்ந்த விஷயம். அதை இந்தியா தான் தீர்மானிக்க வேண்டும்; டிரம்ப்போ, அமெரிக்கா வோ அல்ல!; ஆனால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா ‘அனுமதி’ அளிக்க வேண்டிய நிலைக்கு இந்தியாவின் சுதந்திரத்தையும், 140 கோடி மக்க ளின் இறையாண்மையையும், மோடி  அரசு அமெரிக்காவிடம் அடகு வைத்திருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் காரணமாக இந்தியா பெரும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. குறிப்பாக 25 நாட்களுக்கான கச்சா  எண்ணெய் இருப்பு மட்டுமே இந்தியா வசம் உள்ளது என ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சகம் மூன்று நாட்களுக்கு முன் தெரிவித்தது.   இந்தச் சூழலில் 9.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்தது. ஆனால் மோடி அரசு உடனடியாக அதற்கு பதி லளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான், இந்தியா வில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப் பாட்டைச் சமாளிக்க, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக அனுமதி அளிப்ப தாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க கருவூலத்துறை  செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதற்காக இந்தியா தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம்  இருந்து கச்சா  எண்ணெய் வாங்க   அனுமதி வழங்கப் படுவதாகவும், ஏற்கனவே கடலில் சிக்கியுள்ள ரஷ்யாவின் எண்ணெய் டேங்கர்களில் உள்ள எண்ணெய் மட்டுமே இந்தியாவிற்கு செல்லும் என்பதால் இந்த வர்த்தகத்தால் ரஷ்யாவிற்கு ஒன்றும் பெரிய லாபம் கிடைத்து விடாது என்பதால் இதற்கு அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது 2026 மார்ச் 5 அல்லது அதற்கு முன் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட ரஷ்ய கப்பல்களில் உள்ள எண்ணெய்யை மட்டுமே இந்தியா பெற வேண்டும்; அதுவும் ஏப்ரல் 4-க்குள் இறக்குமதியை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த  எண்ணெய் தயாரிப்புகள் இந்தியத் துறைமுகங்களில் மட்டுமே இறக்கப்பட வேண்டும் மற்றும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்ட நிறு வனங்கள் மட்டுமே இவற்றை வாங்க  வேண்டும் என்று அடுக்கடுக்கான உத்தரவுகளையும் அமெரிக்கா பிறப்பித்துள்ளது. இதையடுத்துத் தான், அமெரிக்காவின் உத்தரவு ஏகாதி பத்திய ஆணவத்தின் வெளிப்பாடு என்றும், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா அனு மதி கொடுக்க வேண்டுமா? என்றும்,  இதன்மூலம் ஒன்றிய பாஜக அரசு, சர்வதேச அரங்கில் இந்தியாவை தரம் தாழ்த்தி விட்டது என மோடி அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா வளர்ச்சியடைய அனுமதிக்க மாட்டோம்!

புதுதில்லிக்கே வந்து அமெரிக்கா சவால் இந்தியாவில் 2026 ‘ரைசினா டயலாக்’  என்ற மாநாடு தில்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் அமெரிக்காவின் துணைச் செயலாளர் லாண்டாவ் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. மாநாட்டிலும் லாண்டாவ் பேசியுள்ளார். அப்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். ‘நீங்கள் உங்கள் சந்தைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று நாங்கள் அனுமதிப்பதும், அடுத்த சில ஆண்டுகளில் பல வணிக நிகழ்வுகளில் நீங்கள் எங்களையே முந்திச் செல்வதும் (வீழ்த்துவதும்) இனி நடக்காது,” என்று கூறியுள்ளார். இந்தியாவுக்குக் கட்டுப்பாடற்ற சந்தை அணுகலை வழங்கி, அதனைச் சீனா போன்ற ஒரு பெரிய பொருளாதாரப் போட்டியாளராக மாற்ற அமெரிக்கா விரும்பவில்லை எனவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.