tamilnadu

ஆர்எஸ்எஸ் புகழ்பாடியதன் மூலம் தியாகிகளை அவமதித்த மோடி!

தியாகிகளை அவமதித்த மோடி: எம்.ஏ. பேபி சாடல்

புதுதில்லி, ஆக. 16 - 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வெள்ளிக் கிழமை செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை யாற்றினார். அப்போது, “100 ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (RSS) என்ற ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். தேசத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது ஒரு பெருமை மிக்க, பொன்அத்தியாயம். சுயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக் காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், ஆர்எஸ்எஸ் உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார். விடுதலைப் போராட்டத்திற்கு சம்பந்த மில்லாத- மாறாக, விடு தலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த இயக்கம் ஆர்எஸ்எஸ். அவ்வா றிக்கையில், நாட்டின் 79-ஆவது சுதந்திர தின உரையில், அந்த அமைப்பை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதற்கு, நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் சந்தே கத்துக்குரிய பல வரலாற்று பதிவுகளை கொண்ட ஆர்எஸ்எஸ்-சை புகழ்ந்து பேசினார். இது மிகவும் வருந்தத்தக்கது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் நினைவை அவமதித்து விட்டார்” என விமர்சித்துள்ளார்.