tamilnadu

மோடி அரசு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கவில்லை

மோடி அரசு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கவில்லை

பிஎம்கேர்ஸ் நிதி மோசடி, கொள்ளை

மக்கள் மீது கடன் சுமையை ஒப்ப டைத்துவிட்டு கொரோனா தடுப்பூ சியை இலவசமாக வழங்கியதாக மோடி அரசு ஏமாற்றி யுள்ளது என திரிணா முல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள் ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆதாரத்துடன் கூறு கையில்,”இது அதிர்ச்சிகரமான விஷயம். மோடியின் கொரோனா தடுப்பூசிகள் இலவசம் அல்ல. கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில், மோடி தலைமையி லான ஒன்றிய அரசும், பாஜகவும் மக்க ளுக்கு “இலவச கொரோனா தடுப்பூ சிகள்” வழங்கியதாகவும், அதை எப்போ தும் போல் “மோடியின் பரிசு” என்றும் கூறின. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் மோடி அரசு கொரோ னா தடுப்பூசிகளை வாங்குவதற்காக மட்டும் வெளிநாட்டு வங்கிகளில் குறைந் தது 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 26,460 கோடி ரூபாய்) கடன் வாங்கியது. இந்த 26,460 கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனை இந்திய மக்கள் தங்கள் வரிகளில் இருந்து திருப்பிச் செலுத்துகிறார்கள். இந்த 26,460 கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடன் தடுப் பூசிகளுக்கு மட்டும்தான். ஆனால் மொத் தத்தில் கொரோனாவைச் சமாளிப்ப தற்காக மோடி அரசு சுமார் 7.25 பில்லி யன் டாலர்கள் (சுமார் 64,000 கோடி ரூபாய்) வெளிநாட்டுக் கடன் பெற்றது.  பிஎம்கேர்ஸ் நிதி கொள்ளை கொரோனா காலத்தில் மோடி பிஎம் கேர்ஸ் நிதியை உருவாக்கி, ஆயிரக்க ணக்கான கோடிகள் நன்கொடைகளை வசூலித்தார். இருப்பினும், இது ஒரு தனியார் நிதி என்று கூறி, பிஎம் கேர்ஸ் நிதியின் விவரங்களை வெளிப்படுத்த மோடி அரசு மறுத்துவருகிறது. இந்த நிதி தேசிய சின்னத்தையும் அரசாங்க வலைத்தள முகவரியையும் பயன் படுத்துகிறது. மோடி அரசு கொரோனா காலத்தில் 64,000 கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனை பெற வேண்டியிருந்தது என்றால், பிஎம் கேர்ஸ் நிதியின் நோக்கம் என்ன? ரூ.26,460 கோடி வெளிநாட்டுக் கடனைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை வாங்கும் வகையில் இந்திய மக்களின் மீது சுமையை ஏற்றிய போது, கொரோனா தடுப்பூசிகள் எப்படி “இலவசம்” ஆகும்? பிஎம்கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. இது நன்கொடைகள் வாங்கப் பட்ட மோடியின் தனிப்பட்ட ரகசிய நிதி யாகும். இந்த நிதியில் உள்ள பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விரிவான கணக்கு எதுவும் இல்லை. கொரோனாவுக்காக ஆயிரக்க ணக்கான கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த இந்தியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் மோடி முற்றிலும் ரகசி யமாக தனது தனிப்பட்ட பிஎம்கேர்ஸ் நிதியை அனுபவிக்கிறார். இது ஒரு கொள்ளையாகும். கொரோனாவை ஒரு காரணமாகக் காட்டி, மோடி மற்றும் பாஜகவின் நலனுக்காகவே நடத்தப்பட்ட ஒரு மோசடிதான் பிஎம் கேர்ஸ் நிதி” என அதில் குற்றம் சாட்டி யுள்ளார்.