வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் : தேஜஸ்வி சாடல்
வெளிநாட்டுப் பயணங்களில் சிரி த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி கடுமையாகச் சாடியுள்ளார். பீகாரில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்காளர் உரிமைப் பயணத்தின் போது, அவர் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மைக்கை எடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறுக் கருத்துகள் தெரிவித்தது சர்ச்சையானது. இந்த நிலையில் இதனை அரசியல் காரணத்திற்காக பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் தேஜஸ்வி பேசியதாவது, ”யாருடைய தாயையும் யாரும் அவமதிக்கக் கூடாது. நாங்கள் இதை ஆதரிக்கவில்லை, அது எங்கள் கலாச்சாரத்திலும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோனியா காந்தியைப் பற்றிப் பேசியுள்ளார், நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என் தாயையும் சகோதரிகளையும் அவமதித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பெண்க ளைத் தொடர்ந்து அவமதிக்கிறார்கள். இது எல்லாம் பீகார் மக்களுக்குத் தெரியும். பிரதமர் இவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் இருந்த போது சிரித்துக் கொண்டிருந்தார். இந்தியா வந்தவுடன் அழத் தொடங்கிவிட்டார்” என விமர்சித்துள்ளார்.