சென்னை,மார்ச் 16- பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சி அதிகா ரத்திற்கு வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக் கிறார். அதில், பஞ்சாப் மாநில முதலமைச்ச ராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத் தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட் டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக் காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வ தாக அதில் முதலமைச்சர் ்மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.