பிசிசிஐ தலைவராக நியமிக்க உள்ள மிதுன் மன்ஹாஸ் கம்பீருக்கு வேண்டப்பட்டவர்
இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளராக இருப்ப வர் பாஜக முன்னாள் எம்.பி., கவுதம் கம்பீர் (இந்திய அணி யின் முன்னாள் தொடக்க வீரர்) ஆவார். இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்றப் பின் இந்திய அணி வீரர்கள் பட்டியல் மற்றும் பயிற்சியாளர்கள் தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே சேர்த்து வருகிறார். இதற்கு சீனியர் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் தலைவராக (பிசிசிஐ) நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் மிதுன் மன்ஹாஸ் கூட கம்பீருக்கு நெருக்கமானவர் தான். பிசிசிஐ தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 28ஆம் தேதிதான் கடைசி நாள் என்ற நிலையில், மன்ஹாஸை தேர்வு செய்துவிட்டதாகவும், விரைவில் அறி விப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த மிதுன் மன்ஹாஸ்? 1997-98ஆம் ஆண்டில் தில்லி அணிக்காக உள்ளூர் அணியில் அறிமுக மான மிதுன் மன்ஹாஸ் (ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்) நன்றாக விளை யாடினாலும் சச்சின், லக்ஷ்மண், டிராவிட் ஆதிக்கம் காரணமாக இந்திய தேசிய அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை. அந்த கால கட்டத்தில் தில்லி அணியில் கம்பீரும் விளையாடியதால் அவருக்கு மிகவும் நெருக்கமான நபராக மிதுன் மன்ஹாஸ் இருக்கிறார். 2008ஆம் ஆண்டில் கம்பீர் பரிந்துரை காரணமாக ஐபிஎல் தில்லி அணி மன்ஹாஸை வாங்கியது. அதன் பின்னர் 2011இல் புனே அணிக்காக வும், 2014இல் தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணிக்காகவும் விளை யாடினார். மொத்தம் 55 ஐபிஎல் போட்டி களில் விளையாடி 22.34 சராசரியில் 514 ரன்களை எடுத்தார். ஆனால் ஒரு முறை கூட தேசிய அணியில் அவர் விளையாடியது கிடையாது. 2017ஆம் ஆண்டில் ஐபிஎல் பஞ்சாப் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்த மன்ஹாஸ், அதன்பிறகு வங்கதேச இளையோர் (யு-19) அணிக்காக பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டார். 2 வருடங்களுக்கு பிறகு பெங்களூரு துணை பயிற்சி யாளராக பணியாற்றிய நிலையில், கடைசியாக 2022ஆம் ஆண்டில் குஜ ராத் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்த அவர், கடந்த சீசன் வரை அப்பதவியில் இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு அமலாக்கத்துறை முன் ராபின் உத்தப்பா ஆஜர்
ஆன்லைன் சூதாட்ட செய லியை விளம்பரப்படுத்து வதன் மூலம் பெரிய அளவிலான பரி வர்த்தனைகள் செய்யப்பட்டதா?, பண மோசடியுடன் தொடர்புடையதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசா ரித்து வருகிறது. மேலும் முதலீட்டா ளர்களை கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி கணிசமான வரிகளை ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் சட்ட விரோத சூதாட்ட செயலிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது “ஒன் கக்ஸ்பெட் (1xBet)” என்ற சட்ட விரோத பந்தய செயலியுடன் தொடர்பு டைய பணமோசடி வழக்கின் விசார ணையின் பகுதியாக அமலாக்கத்துறை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்களான யுவராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பியது. இவர்களில் ராபின் உத்தப்பாவை திங்களன்று விசாரணைக்கு ஆஜராகு மாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதன்படி உத்தப்பா திங்களன்று காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகினார்.
புரோ கபடி 2025 : இன்றைய ஆட்டங்கள்
