tamilnadu

சமூக வலைதளங்களில் தவறான தகவல் : டிஜிபி கடும் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 3- சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றுடிஜிபி சைலேந் திரபாபு எச்சரித்துள்ளார். சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டிஜிபி சைலேந் திரபாபு, கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நாம் கேட்க க்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக் கூடிய காட்சிகளில் எது உண்மை என்பதை அறிந்துகொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான், நம்மால் தெளிவான முடிவு எடுக்க முடியும்” என்றார்.      அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி பலரிடம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றுகின்றனர். உண்மையை உணராத மக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். அவற்றை யும் சிலர் உண்மை என்றே நம்புகின் றனர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படு கின்றன. குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிர மாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக் கப்பட்டோர்தான் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புகின் றனர்.இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோரை காவல் துறையினர் கண் காணித்து வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.