tamilnadu

img

தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வெளியிட்டனர்

தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வெளியிட்டனர்

புதுக்கோட்டை, ஆக.2 - தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்டனர். செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, துணை மேயர் எம்.லியாகத் அலி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷப, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.