tamilnadu

img

குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 9 பேர் பலி; 43 பேர் காயம்

உதகை, அக்.1- குன்னூர் அருகே மலைப்பாதை யில் சென்று கொண்டிருந்த சுற்றுலா  பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயி ரிழந்தனர். மேலும், 43 பேர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்  பாளையம் மலைப்பாதையில் அமைந்  துள்ள மரப்பாலம் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சனிக்  கிழமை அன்று இரவு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்  போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக் கிய 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.  மேலும் விபத்தில் பலத்த காயம டைந்த மூன்று பேருக்கு உயர் சிகிச்சை வழங்க குன்னூர் மருத்துவர்கள் சார் பில் பரிந்துரைக்கப்பட்டு, இரண்டு பேர்  உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு நபர் கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனி டையே பேருந்து விபத்தில் பத்மராணி என்ற பெண்மணி காணவில்லை என  சக சுற்றுலா பயணிகள் காவல்துறை யிடம் தெரிவித்தனர்.  அதனடிப்படையில் விபத்து ஏற்  பட்ட பகுதியில் ஞாயிறன்று அதிகாலை  மீண்டும் காவல் துறையினர் தேடுதல்  பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்  தின் அடியில் உடல் நசுங்கி உயிரி ழந்த நிலையில், அவரின் உடல் மீட் கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த வர்களின் உடல்கள் குன்னூர் அரசு  மருத்துவமனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ்  மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இவ்விபத்து  தொடர்பாக குன்னூர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  விபத்து நடத்த பகுதியில் கோவை சரக  காவல் துறை துணைத்தலைவர் சரவண  சுந்தர் ஞாயிறன்று காலை ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் கூறு கையில், ஆய்வின் முதற்கட்ட விசார ணையில், விபத்திற்கு சுற்றுலா பேரு ந்து ஓட்டுநரின் கவனக்குறைவு இருந் துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பேருந்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்த பிறகு தெரியவரும். விபத்து நடைபெற்ற பகுதியில் மூன்று துறை கூட்டு ஆய்வு நடைபெற உள்ளதாக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் அஞ்சலி

விபத்து குறித்து தகவலறிந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் ஆகியோர் குன்னூர் அரசு லாலி  மருத்துவமனையில் வைக்கப்பட்டி ருந்த உயிரிழந்த 9 நபர்களின் உடல்  களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிகிச்சை  பெற்று வரும் நபர்களுக்கு முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோ லையை வழங்கினர். இந்நிகழ்வின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட ஆட்சி யர் மு.அருணா ஆகியோர் உடனி ருந்தனர்.