ஜெயங்கொண்டம் தொகுதியில் ரூ.9.83 கோடியில் 17 புதிய வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு
அரியலூர், ஆக. 9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிய வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தார். போக்கு வரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்று, இருகையூர், சிங்கராயபுரம், நாயகனைப்பிரியாள், அணைக்குடம், வாணதிரையன்பட்டினம், இடையார், உடையார்பாளையம் ஆகிய கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பில் தார்ச்சாலைகள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், மின்மாற்றிகள், இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் என 17 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை அந்தந்த கிரா மங்களில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி உட்பட பலரும் கலந்துகொண்டனர். நலமுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம் அரியலூரில், நலமுடன் ஸ்டாலின் மருத்துவ முகாமை, போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் 14 வகையான நோய்களுக்கு சிகிச்சைகள் மற்றும் இலவச பரிசோதனைகள் செய்யப் பட்டன. அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள் குறித்துக் கேட்டறிந்தார்.