tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தீக்கதிர் அரங்கிற்கு அமைச்சர் மெய்யநாதன், பாடலாசிரியர் சினேகன் வருகை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தீக்கதிர் அரங்கிற்கு அமைச்சர்  மெய்யநாதன், பாடலாசிரியர் சினேகன் வருகை

புதுக்கோட்டை, அக். 12-  புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், தீக்கதிர் அரங்கிற்கு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் வருகை தந்து பார்வையிட்டனர். 8 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன. இதில், தீக்கதிர் நாளிதழுக்கு என தனியாக ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் தீக்கதிர் நாளிதழ் விற்பனை மற்றும் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.  மேலும், ஏராளமான புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்கில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், திரைப்படப் பாடலாசிரியர் சினேகன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் வருகை தந்து தீக்கதிர் நாளிதழின் பங்களிப்பை நினைவு கூர்ந்து பாராட்டினர்.