tamilnadu

img

பாடாலூரில் பால் கொள்முதல் நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் நேரில் ஆய்வு

பாடாலூரில் பால் கொள்முதல் நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் நேரில் ஆய்வு

பெரம்பலூர், ஆக.2 - பெரம்பலூர் அருகே பாடாலூரில் கட்டப்பட்டு வரும் பால் கொள்முதல் நிலைய கட்டுமான பணியினை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்  வட்டத்திற்குட்பட்ட பாடாலூர்  ஊராட்சிக்குட்பட்ட திருவளக்குறிச்சி யில் ரூ.26.53 கோடியில் பால் கொள் முதல் நிலையம் மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளையும், ரூ.121 கோடி மதிப் பீட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பால்  பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங் கள் கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாக மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெள்ளிக் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால் வளத்துறையின் சார்பில், ஆவின்  பால் உற்பத்தி மற்றும் விற்பனை யினை அதிகரித்தல் தொடர்பாக பால்  உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின்  செயலர்கள் மற்றும் உற்பத்தியாளர் களுடன் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் மனோ  தங்கராஜ், ஆவின் பால் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள், பால்  உற்பத்தியாளர்கள், ஆவின் அலுவலர் களுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் பால்வளத் துறையின் சார்பில் 85 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 2,227  பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள்  மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

ஜனவரி-க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், “பாடாலூரில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பாலினை கையாளும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பால் கொள்முதல் நிலையம் மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையத்தின் பணிகள் அனைத்தையும் எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் பவுடர் தயாரிக்கும் ஆலையின் மூலம் பாடாலூரில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கப்படவுள்ளது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, சென்னை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 முதல் ரூ.4 வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்” என தெரிவித்தார். ஆய்வின் போது ஆட்சியர் அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஆவின் பொது மேலாளர் முத்துமாரி, பெரம்பலூர் துணைப் பதிவாளர் பால்வளம் நாராயணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.