நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு; அமைச்சர் உறுதி!
பெ. சண்முகம் தலைமையிலான காத்திருப்புப் போராட்டம் தற்காலிக வாபஸ்!
கோயம்புத்தூர், ஆக. 4 – பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு நிலம் கொடுத்த விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கப்படாத பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி யரகம் முன்பு நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிக மாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக் கழ கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயி களுக்கு, ‘உரிய இழப்பீட்டைக் கொடு, அல்லது நிலத்தை திருப்பிக் கொடு!’ என வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தலைமை யில் திங்களன்று காத்திருப்புப் போராட்டம் துவங்கியது. 1980-இல் அளிக்கப்பட்ட 926 ஏக்கர் நிலம் கடந்த 1980-ஆம் ஆண்டில், கோவை மருதமலை அடிவாரத்தில், பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக 600-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளி டம் இருந்து 926 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால், நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனையடுத்து, விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். 2007-ஆம் ஆண்டில், நிலத்திற்கு ரூ. 160 கோடி இழப்பீடு வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகையையும் முழுமை யாக வழங்காமல், அரசு மேல் முறையீட்டிற்கு சென்றது. இதையடுத்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ரூ. 350 கோடி இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பு 2022-இல், சென்னை உயர் நீதிமன்றம் 9 சத விகிதம் வட்டியுடன் சேர்த்து, ரூ. 350 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டது. எனினும், அரசு இழப்பீடு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில், காத்திருப்புப் போராட்டத்தை, நிலம் வழங்கிய விவசாயி கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் துவக்கினர். கோவை மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயி லில், நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே, போராட்டத் தலைவர்களு டன், கோவை மாவட்ட ஆட்சியர் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உறுதியான தீர்வு எதுவும் எட்டப்படாத தால், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவையும் அங்கேயே உண்டனர். இரவு முழுவதும் தங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமைச்சர் எ.வ. வேலு பெ. சண்முகத்துடன் பேச்சு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்ம நாபன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஆறுச்சாமி, மணி உள்ளிட்ட சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், விவசாயிகள் சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், தமிழகத்தின் மூத்த அமைச்சர் எ.வ. வேலு, சிபிஎம் மாநிலச்செய லாளர் பெ. சண்முகத்திடம் பேசினார். இந்த பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தும் முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஓரிரு நாளில் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்தார். அதனையேற்று காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
‘இழப்பீட்டைக் கொடு, அல்லது நிலத்தைக் கொடு!’ 45 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்!
காத்திருப்புப் போராட்டத்தின் போது, சிபிஎம் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “பல்கலைக்கழகம் தங்கள் பகுதிக்கு வரு கிறது என்ற ஆர்வத்தில், விவசாயிகள் மிகக் குறைந்த விலைக்கு தங்கள் நிலத்தை மனமுவந்து கொடுத்தனர். ஆனால், 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காகக் காத்திருக் கிறார்கள். இது நியாயமல்ல. இதுதொடர் பாக, முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட கல்வித் துறை இயக்குநர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்று விட்டோம். பண நெருக்கடி காரணமாக இழப்பீடு வழங்க முடியாவிட்டால், பயன்படுத்தப்படாமல் உள்ள மீதி நிலத்தையாவது விவசா யிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். 928 ஏக்கரில் சுமார் 600 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, ‘பணத்தைக் கொடுங்கள் அல்லது நிலத் தைக் கொடுங்கள்’ என்று நாங்கள் கேட் கிறோம். இழப்பீடு வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.