tamilnadu

img

மாதர் சங்க உடுமலை, மேட்டூர் மாநாடு

மாதர் சங்க உடுமலை, மேட்டூர் மாநாடு

உடுமலை, ஜூலை 13- மாதர் சங்கத்தின் உடுமலை மற்றும் மேட்டூர் இடைக் கமிட்டி மாநாடுகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டம், உடுமலை ஒன்றிய மாநாடு ஞாயி றன்று, ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பானுமதி துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கனக ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக சங்கீதா,  செயலாளராக கல்பனா, பொருளாளராக நாகரத்தினம், துணைத்தலைவர்களாக சுகன்யா, ராணி, துணைச்செய லாளர்களாக நித்யா, பவானி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட நிர்வாகி செல்வி நிறைவுரையாற்றி னார். லாவண்யா நன்றி கூறினார். சேலம் இதேபோன்று மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டம்,  மேட்டூர் வட்ட 4 ஆவது மாநாடு, ஞாயிறன்று அரசு  ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டத்  தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். மூத்த உறுப் பினர் முனியம்மாள் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத் தார். மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி துவக்கவு ரையாற்றினார். வட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, பொருளாளர் தனம் ஆகியோர் அறிக்கைகயை முன் வைத்தனர். மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. பெருமா, சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். மாதர் சங்க மாநிலச் செயலா ளர் ஜி.ராணி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக கே.தங்கமணி, செய லாளராக கே.சகுந்தலா, பொருளாளராக டி.தனம் உட் பட 11 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி நிறைவுரையாற்றினார்.