tamilnadu

img

செப்.24-27 மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு

செப்.24-27 மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு 137 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைப்பு

மார்த்தாண்டம், ஜுலை 5- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு மார்த்தாண்டத்தில் நடைபெறுவதை முன்னிட்டு 137 பேர்  கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 செப்டம்பர் 24 முதல் 27 ஆம் தேதி வரை கன்னியாகுமரி  மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் உள்ள ஒய்எம்சிஏ மகாலில் ஜுலை 5 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மேரி ஸ்டெல்லாபாய் தலைமை வகித்தார். அகில இந்திய இணைச் செயலாளர்  பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா, பொருளாளர் ஜி.பிரமிளா, மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாநில துணைத்தலைவர்கள் கே.பாலபாரதி, என்.உஷாபாசி, மாநிலக்குழு உறுப்பினர்  ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயலாளர் எம்.ரெகுபதி, பொருளாளர் ஆர். சாரதாபாய் , துணைத் தலைவர்கள் ஏ.எம்.வி.டெல்பின், டயானா கிறிஸ்ட்டி, குழித்துறை நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.சி.ஜுலியட் மெர்லின் ரூத், எஸ்.பி.ஜலீலா ராணி, சி.லலிதா, யு.ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா,மாநில துணைத்தலைவர் கே.பாலபாரதி ஆகியோர் உரையாற்றினர்.   வரவேற்புக்குழு கூட்டத்தில் நிறைவாக பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா,  மாநாட்டை நடத்துவதற்கான 137 பேர் கொண்ட வரவேற்புக்குழுவை முன்மொழிந்தார். அதன்படி தலைவராக டாக்டர் டி.லேகா, செயலாளராக சங்க மாவட்டச் செயலாளர் ரெகுபதி, பொருளாளராக வழக்கறிஞர் அனந்தசேகர், புரவலர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், தொழிலதிபர் ஜாகிர் உசேன், டாக்டர் லியா சாலமன், செலஸ்டின், துணைத் தலைவர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆர். செல்லசுவாமி, என்.எஸ்.கண்ணன், என்.ரெஜீஸ்குமார், நீலாம்பரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.