மாதர் சங்க மாநில மாநாடு துவங்கியது
குழித்துறையில் மாபெரும் பேரணி; பல்லாயிரக்கணக்கில் பெண்கள் அணிவகுப்பு
குழித்துறை, செப். 24 - கும்மியடி பெண்ணே கும்மியடி! தமிழ்நாடு முழுவதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! என்கிற பாரதியின் கனவை நனவாக்கும் விதமாக தமிழ்நாட்டின் தெற்கு எல்லையில் கேரளத்தை ஒட்டிய குழித்துறை நகரம் பெண்களின் விண்ணதிரும் முழக்கத்தால் பெருமை கொண்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக செப்டம்பர் 24 புதனன்று மாலை படந்தாலுமூட்டில் இருந்து வெண்கொடி ஏந்திய பெண்படையின் மாபெரும் பேரணி நடைபெற்றது. 17 வெண்கொடிகள் - முத்துக்குடைகள் அணிவகுப்புடன் நடந்த பேரணி அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைக்க, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் வந்திருந்த பெண்கள் நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் உரிமை முழக்க மிட்டு பீடுநடை போட்டனர். 17 ஆவது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 17 வெண்கொடிகளை, சீருடை அணிந்த பெண்கள் ஏந்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி, துணைத் தலைவர் உ.வாசுகி, துணைச் செயலாளர் பி. சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா, நிர்வாகி கள் எஸ்.கே. பொன்னுத்தாய், கே. பாலபாரதி, ஆர். சசிகலா உள்ளிட்டோர் அணிவகுத்துச் சென்றனர். 17 முத்துக்குடைகளும் அதனைத் தொடர்ந்து மாவட்டங்களின் பதாகையின் கீழ் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக் கானோர் அணிவகுத்து சென்றனர். திருத்துவபுரத்தில் சகோதர அமைப்புக்கள் வரவேற்பு திருத்துவபுரத்தில் சிஐடியு - போக்கு வரத்துத் தொழிலாளர், கட்டுமானத் தொழி லாளர், தையல் கலைஞர்கள், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட சகோதர அமைப்புகள் சார்பில் எழுச்சி முழக்கங்களு டன் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வாலிபர் சங்கத்தின் சார்பில் மோர் விநியோ கம் செய்யப்பட்டது. பேரணியின் நிறைவாக, தாமிரபரணி (குழித்துறை) ஆற்றின் கரையில், ஷாஜாதி நினைவுத் திடலில் (வாவுபலி பொருட்காட்சி திடல்) மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்புரை மாநில துணைத் தலைவர் என். உஷா பாசி தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பி னர் ஆர். லீமாறோஸ் வரவேற்றார். குமரி மாவட்டத் தலைவர் எஸ். மேரி ஸ்டெல்லா பாய் முன்னிலை வகித்தார். அலை கட லென திரண்டிருந்த பெண்கள் மத்தியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் அகில இந்திய, மாநில தலைவர்கள் பேசினர். குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.ரெகுபதி நன்றி கூறினார். மாநாட்டையொட்டி இரட்டை நகரமான மார்த்தாண்டத்திலும் குழித்துறையிலும் சாலையின் இருபுறமும் வெண்கொடிகளும் தோரணங்களும் அனைவரையும் வர வேற்றன. பேரணியின் முகப்பில் முழுவதும் பெண்களைக்கொண்ட நெடுமங்காடு ருத்ரதாளம் குழுவினரின் சிங்காரி மேளம் மற்றும் புதுவை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் சாலையி்ன் இருபுறமும் குவிந்திருந்த பொதுமக்களை வியக்க வைத்தது. இன்று பிரதிநிதிகள் மாநாடு வியாழனன்று (செப்.25) காலை மார்த் தாண்டம் பெண்ணுரிமை போராளிகள் டி. சரஸ்வதி, மாதம்மாள் நினைவரங்கத்தில் (கேகேஎம் திருமண மண்டபம்) பொது மாநாடும், பிரதிநிதிகள் மாநாடும் நடைபெற உள்ளது. சவால்களை எதிர்கொண்ட சாத னையாளர்கள், மூத்த தலைவர்கள் இதில் கவுரவிக்கப்பட உள்ளனர். தமிழக மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி, இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. கண்ணகி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நினைவுச் சுடர்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடிகளான கே.பி. ஜானகி யம்மாள், பி. நாகம்மாள், பாப்பா உமா நாத், மைதிலி சிவராமன், ஷாஜாதி கோவிந்த ராஜன், ஆர். கஸ்தூரி, என்.எஸ். ருக்மணி அம்மாள், கு. லீலாவதி, எஸ். ஞானம், கே. வீரம்மாள், கிருஷ்ணம்மாள், டி.ஆர். மேரி, ஆர். பிருந்தா, டி. சரஸ்வதி ஆகியோரின் நினைவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ள சுடர்களும், கடலூரில் இருந்து எடுத்துவரப் பட்டுள்ள மாநாட்டுக் கொடியும் வியாழ னன்று காலை மாநாட்டு அரங்கில் சங்க மிக்கின்றன. மாதர் சங்கத்தின் தலைவர்கள் கொடியையும், நினைவுச் சுடர்களையும் பெறுகின்றனர்.