மாபெரும் ரத்ததான முகாம்
அறந்தாங்கி, ஆக. 10- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜி பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் மற்றும் மாவட்ட, துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை வகித்தனர். ஆக.15 ஆம் தேதி கொண்டாடவிருக்கும் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ரத்த தான முகாமை, சிறப்பு அழைப்பாளர் காவல் துணை கண்காணிப்பாளர் காயத்திரி துவக்கி வைத்தார். ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில், 40 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் வழங்கிய அனைவருக்கும், மருத்துவர் ஹேமலதா சான்றிதழ்களை வழங்கினார்.