tamilnadu

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

பிரமிடு பலரும் செய்து பார்த்திருக்கீங்க. மிக சிறப்பு. பாபிலோனியர்கள், மாயன் கள் மட்டுமல்ல எகிப்தியர்களும் மிகச் சிறந்த கணிதங்களை கையாண்டார்கள். எகிப்திய பிரமிடுகள் தான் உலக புகழ் பெற்றவை.  இவைகள் எந்த அளவுகளை கொண்டு உரு வாக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? தொடர்ந்து வாசியுங்கள். எகிப்தியர்களின் நாகரீகம் நைல் நதிக்கரை யில தான் வளர்ந்தது. அதனால் அவர்களுக்கு பெரும் துன்பம் ஏற்பட்டது. ஏன்னா நைல் நதி யில விவசாயம் செஞ்ச பயிறுகளை வெள்ளம் வந்து அடிச்சிட்டு போயிடும். திடீன்னு தண்ணி கொஞ்சமாயிடும். இதனால சரியான விவசாயம் பண்ண முடியில. இதுலதான் அவங்களுக்கு கணக்க வாழ்கையோடு இணைச்சிகிட்டாங்க. இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கி றதுக்கு ஒரு வழிய கண்டுபிடிச்சாங்க. வானி யலை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மழை காலம் வருவதையும், வெயில் காலம் தொடங்கு வதையும் விவசாயிகளுக்கு சொன்னாங்க. இதுக்கு அவங்களுக்கு கணக்கு பெரிதும் உதவுச்சு. இதை கொண்டு காலண்டர் ஒன்றை உருவாக்குனாங்க, மேலும் ஒரு ஆண்டு குறிப்பையும் உருவாக்குனாங்க.  எகிப்தியர்கள் Hieroglyphs என்னும் எண்முயை அறிமுகப்படுத்தினாங்க. நீங்க  கூட கேட்டிருந்தீங்க. என்ன ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நம்பர போட்டாக்கா எப்படி புரிஞ்சுக்கிறதுன்னு. உண்மையில கணக்கு கண்டுபிடிப்பு என்பது தனியா யாருக்கும் சொந் தம் கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் இருந்த இனக்குழுக்கள் தங்களுக்கு தேவையான கணக்க அவுங்களே கண்டுபிடிச்சிக்கிட்டாங்க. அதனாலதான் சொல்லுரேன் கணக்கு என்பது நமக்கு இயல்பானது. அது நம்ம கூடவே வாழ்க்கையோடு இணைந்தே வரக்கூடியது. அத  தெளிவுபடுத்ததான் இந்த தொடர் வந்துகிட்டு இருக்கு. 

Hieroglyphs முறையில ஒவ்வொரு  எண்ணுக்கும் ஒரு குறியீட பயன்படுத்தியி ருக்காங்க. இங்க எண்களை பத்துலட்சம் வரை எண்ணும் வகையில் குறியீடுகள் இருப்பதை நாம் பார்க்கலாம். நீங்க இதற்கு முன்னாடி இப்படி யான வகையில் எண்களை நாம் பார்த்திருக்க முடி யாது. மாயன்கள் கூட 360 வரைதான் எண் களை கைகொண்டுள்ளனர். இவங்களுக்கு ஏன் இவ்வளவு எண் தேவைப்பட்டது? என்றால்  இங்கே மக்கள் தொகை அதிகரித்து இருந்தது.  மேலும் கி.மு.3000ம் ஆண்டு காலத்தில் செழித்து வளர்ந்த நாடாக எகிப்த் இருந்ததால் நிர்வாக சீர்திருத்தம், ராணுவம், வரிவசூல் போன்ற காரணங்களுக்காக எண்களின் எண்  ணிக்கை அதிகமாக தேவைப்பட்டதன் அடிப்ப டையிலேயே 10,00,000 வரையிலான எண் களை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  எண்களை அறிந்து கொள்ள ஏழு குறியீடு களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  இதை எழுதி பார்க்கலாம். எண்ணை எப்படி எழுதுவது? இந்த எண்களை உங்களால் கண்டறிய முடிகிறதா? ஆம்  முதல் எண் 1572 இரண்டாம் எண் 3244 மூன்றாம் எண் 21237 இந்த எண்களை நாம் உற்று நோக்கினால் என்ன தோன்றுகிறது? சரியா சொன்னீங்க இட  மதிப்பு. ஆம் முதன் முதலில் இட மதிப்பை அடை யாளப்படுத்தி எண்களை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த காலத்தில் எகிப்தியான பிரமீடுகள்தோன்றின.

அது மட்டுமல்ல நிலங்களை பிரிப்பதற்கு இவர்கள் பின்னங்களை பயன்படத்தியுள்ளனர். என்னது பின்னமா? ஆமாம் பின்னமே தான்.  இவர்கள் முதலில் ரொட்டி துண்டுகளை தான் சம  பாகமாக பிரித்திருக்கிறார்கள். 5 ரொட்டிகளை 10 பேருக்கு இரு சமபாகமாக பிரித்து கொடுத்தி ருக்குராங்க. இதை பல தடவை செய்து பார்த்து விட்டு, பலருக்கும் எப்படி சமமாக பிரிப்பது என்பதை அறிந்து கொண்டு பின்னங்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பின்னர் இதனை நிலத்தைப் பிரிப்பதற்கும் பயன்படுதி யிருக்கிறார்கள். அதிசய தக்க பிரமீடுகளை உருவாக்கியவர் கள் எகிப்தியர்கள் தான். இதற்கு அவங்க பயன்படுத்திய அளவீடு என்ன தெரியுமா? நம்ம  இன்றைக்கும் பூ வாங்கும் போது ஒரு முழம்  என்று கேட்கிறோமே அதேதான். கை முழ அள வையும், அடி அளவையும் பயன்படுத்திதான் பிரமீடுகளை உருவாக்கியிருக்காங்க. இந்த அள வீட்டு முறையை நமக்கு வழங்கியவர்கள் எகிப்தி யர்கள் தான்.  நாம் கட்டிடங்களை கட்டுவதற்கு முன் வரை  படம் போடுவது போல எகிப்தியர்கள் வரை படங்களை பப்பாரஸ் என்கிற மரக்கூழிலிருந்து தயாரிக்கப்பட்ட தாளில் குறித்து வைத்துள்ளனர். அந்த ஆவணங்கள் தான் எகிப்தியர்களின் கணித அறிவை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. பாபிலோனியர்கள் கணக்கின் அடிப்படை களை அறிமுகப்படுத்தினர். ஆனால் எகிப்தி யர்கள் கணக்கிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தார்கள். கணிதத்தினை கை களோடு இணைத்து பயணித்தவர்கள் எகிப்தியர்கள். அவர்கள் பயணித்த கைகளை பற்றி கணக்கோடு கை கோர்க்கலாம்.. சின்னதாக ஒரு விளையாட்டு விளை யாடலாம் மேலே உங்களுக்கு எகிப்தியர்கள் பயன் படுத்திய எண் குறியீடுகள் கொடுகப் பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி 10 எண்களை எழுதி ஒரு போஸ்ட் கார்டில் போடவும். இதில் அனைத்து குறி யீடுகளும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எங்கே உங்கள் திறமையை பார்க்கலாம்.