tamilnadu

img

எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரப்படுத்துக!

எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரப்படுத்துக!

செப்.24-30 மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

மதுரை, செப்.13 - தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற் குழு சிறப்பு பேரவை கூட்டம், மதுரை யில் மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய அரசு  ஊழியர் சங்க கொடியினை தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச்  செயலாளர் க. நீதிராஜா ஏற்றி வைத் தார். தமிழ்நாடு செவிலியர் மேம் பாட்டு சங்க கொடியினை மாநில தலைவர் கு.சசிகலா ஏற்றி வைத் தார்.  மாநில துணைத்தலைவர் சி. க. சுஜாதா வரவேற்றார். தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் மாநிலச் செயலா ளர் க. நீதிராஜா தொடக்க உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் இரா. தமிழ்,  மாவட்டச் செயலாளர் க.சந்திர போஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், மெ.சுபின் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தீ. நாக ராஜன் சிறப்புரையாற்றினார். ஒப்பந்த முறை மற்றும் அத்துக் கூலி முறையை ரத்து செய்து, எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர் களை நிரந்தரப்படுத்த வேண்டும். “சம வேலைக்கு சம ஊதியம்” வழக்கில் மேல்முறையீட்டை அரசு  திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக் கைகளை வலியுறுத்தி, செப்.24 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தப்படும். மேலும், வழக்குச் செலவுக்காக உண்டியல் மூலம் நிதி சேகரிக்கப்படும். அக்.1 முதல்  10 வரை அனைத்து செவிலியர்களை யும் சந்தித்து உறுப்பினர் சந்தா வசூல்  நிறைவு செய்யப்படும். அக்.14 அன்று  “கோரிக்கை அட்டை” அணிந்து பணி  செய்வது, முதல்வருக்கு கோரிக்கை  கடிதம் அனுப்புவது.  அக்.28 அன்று மாலை, மாவட்டத்  தலைமையகங்களில் ஆர்ப்பாட்ட மும், நவ.20 அன்று மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், டிச.18 அன்று மாவட்டத் தலைநக ரங்களில் உண்ணாவிரதப் போராட்ட மும் நடைபெறும். மேலும், சட்ட மன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அமைச்சர் பெருமக்கள், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைவர்களை சந்தித்து தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி கோரிக்கை கடிதம் வழங்கு வது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.