மகாத்மா காந்தி பிறந்த நாள்: மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
மகாத்மா காந்தியின் 157-ஆவது பிறந்த நாள் வியாழனன்று (அக்.2) நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. இதனையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மரு. ரவீந்திரநாத் (சிபிஐ), பேரா. கருணானந்தன், புதுமடம் ஹலீம் (மமக), முனைவர் பொன்ராஜ், இயக்குநர் ஞானராஜசேகரன், பொருளாதார வல்லுநர் சிவப்பிரகாசம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க .உதயக்குமார், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ். குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
