முதலமைச்சர் கோப்பை 2025 மாநில பளுதூக்கும் போட்டியில் மதுரை மாணவருக்கு வெண்கலப் பதக்கம்
மதுரை, அக். 9- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 பள்ளி மாணவர்களுக்குரிய மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. புதன்கிழமை அன்று மாலை நடைபெற்ற பள்ளி மாணவர்களுக் கான போட்டியில் மதுரை மாவட்ட பளுதூக்கும் கழக வீரர் செல்வன் எஸ்.எம்.சஞ்சய் 71 கிலோ எடைப்பிரி வில் மொத்தமாக186 கிலோ எடை யினைத் (சினாட்சு 84 கிலோ + கிளின் & ஜெர்க் 102 கிலோ) தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இவருக்கு ரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது. செல்வன் எஸ்.எம்.சஞ்சய் மதுரை முல்லை நகர் தனபால் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு மதுரை மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் தலைவர் வ.நீதிசேகர், செயலாளர் பா.ஆனந்த குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பயிற்றுநர் மார்க்ஸ் லெனின், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் க.இராஜா, மண்டல விளையாட்டு முதுநிலை மேலாளர் பி.வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
