மதுரை மேயரின் ராஜினாமா ஏற்பு
மதுரை, அக். 17 - மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்தின் ராஜினாமா மாமன்றக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த் அக்டோபர் 15 அன்று தனது மேயர் பதவியை ராஜி னாமா செய்தார். இதுதொடர்பான கடி தத்தை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனிடம் அவர் வழங்கி னார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை (அக். 17) அன்று துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த்தின் ராஜினாமா தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
தங்கம் விலை 1 லட்சத்தை தொடுகிறது!
சென்னை, அக். 17 - தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ. 2,400 உயர்ந்தது. இதன்மூலம், ஒரு கிராம் ரூ. 12,200 ஆகவும், ஒரு பவுன் ரூ. 97,600 ஆகவும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தீபாவளிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
சிபிஐ குழுவினர் கரூர் வந்தனர்!
கரூர் : கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கிப் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அக்டோபர் 13 அன்று உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் குழு, வியாழக்கிழமை நள்ளிரவு கரூருக்கு வருகை தந்தது. இந்தக் குழு, நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுநீரக முறைகேடு வழக்கு : அமைச்சர் விளக்கம்
சென்னை, அக். 17 - தமிழ்நாடு சட்டப்பேரவையில், சிறுநீரக முறைகேடு தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கமளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார். அப்போது, சிறுநீரக முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிபாளையத்தில் ஆய்வு மேற் கொண்டதாகவும், இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிறுநீரக முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரி வித்தார். தமிழ்நாட்டில் 4 இடங்களில் உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை மறு சீர மைத்துள்ளதாக கூறிய அமைச்சர், சிறு நீரக முறைகேடு விவகாரத்தில் பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.