tamilnadu

img

கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்எல்ஏக்கள்

சென்னை, செப்.26- புதுச்சேரியில் ரூ.12 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று  பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவி லுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலம்  காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தம்பதி, புதுச்சேரி சார் பதிவாளர் உள்ளிட்ட 15 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்து சிறை யில் அடைத்தனர். இந்த சூழலில் இந்த இடத்தின் ஒரு பகுதியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் தனது மனைவி, மகள் மற்றும் தாய் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரது மகனும் நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரிச்சர்ட் என்பவர் இந்த நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும்  அவருடைய மகன் ரிச்சர்ட் உள்ளிட்ட  அனைவரையும் கைது செய்து நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட் டத்தை நடத்தியது. இதனிடையே கோயில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச் சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் அறிக்கை திருப்தி  அளிக்கவில்லை என்றால், வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் எனக்கூறி விசாரணையை அடுத்த  வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் ரூ.12 கோடி மதிப்புள்ள காமாட்சியம்மன் கோயில்  நிலத்தை பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் போலி பத்திரம் தயாரித்து  

அபகரிப்பு செய்வதற்கு மீன்வளத் துறை இயக்குநருக்கும் அப்போதைய மாவட்ட பதிவாளர் பாலாஜி, பத்திரப் பதிவு இயக்குநர் ரமேஷ் ஆகியோ ருக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி  காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனை அறிந்த அவர்கள் தலை மறைவான நிலையில், இருவரை யும் காவல்துறையினர் தேடி வந்த  நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து சென்று காலாப்பட்டு மத்திய சிறை யில் அடைத்தனர். தொடர்ந்து இந்த  வழக்கில் தலைமறைவாக உள்ள பத்திரப்பதிவு இயக்குநர் ரமேஷை தேடி வருகின்றனர். மேலும் இருவர் மீது வழக்கு பதியப்பட்ட பின் தற்கா லிக பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் விசாரணை வளையத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் நில அபகரிப்பு புகார்  நிரூபணம் ஆனால் தொடர்புடைய பாஜக எம்.எல்.ஏ.க்கள் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை. அரசு  ஊழியர்களுக்கு தொடர்பு இருப்ப தால் அவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க  ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.