tamilnadu

img

மு.க. ஸ்டாலின் துர்கா தம்பதியர்க்கு பெ. சண்முகம் நேரில் வாழ்த்து

மு.க. ஸ்டாலின் - துர்கா தம்பதியர்க்கு பெ. சண்முகம் நேரில் வாழ்த்து

சென்னை, ஆக. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் தம்பதி யர், புதன்கிழமையன்று 50-ஆவது திருமண நாளை கொண்டாடினர்.  இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில்,“முதல்வரின் திருமண நாளையொட்டி கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட குடும்ப நிகழ்வு முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறந்த முறையில் செயல்படுவதற்கு உற்ற துணையாக திருமதி துர்கா விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். தம்பதிகள் உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் நேரில் பங்கே ற்று தமது வாழ்த்தை தெரிவித்தார்.