tamilnadu

எம்.எட். மாணவர் சேர்க்கை  விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு  

எம்.எட். மாணவர் சேர்க்கை  விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு  

சென்னை, ஆக. 20- எம்.எட். மாணவர் சேர்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6  அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 11 முதல் தொடங் கப்பட்டது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு வரு கின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 20 உடன்  முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், எம்.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 21 முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் செப்டம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெற லாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி  ஆகஸ்ட் 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங் கும். இதன் விவரம் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம்  மாணவர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்பு கள் செப்டம்பர் 1 அன்று முதல் தொடங்கும் என்று அமைச்சர்  தெரிவித்துள்ளார்