டி.கே. ரங்கராஜனுக்கு மு.வீரபாண்டியன் நேரில் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் செப்டம்பர் 30 அன்று 85ஆவது அகவையில் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில், தோழர் டி.கே. ரங்கராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே. சிவா (தென்சென்னை), ப. கருணாநிதி (மத்திய சென்னை), அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.
